பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இறுதிப்போட்டியில் களமிறங்கினர். இவர்களுடன் சீனத்தைப்பே அணியை சேர்ந்த யாங் போ ஹான் மற்றும் லீ ஜே ஹூய் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் தொடக்கம் முதலே இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி கூட்டணி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் முதல் சுற்றில் சாய்ராஜ்- சிராக் கூட்டணி 21 புள்ளிகளை பெற்று 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பின்னர் இரண்டாம் சுற்று தொடங்கியது.
இரண்டாம் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி கூட்டணி மீண்டும் 21 புள்ளிகளை பெற்று 21-17 என்ற கணக்கில் சீனத்தைப்பே அணியின் யாங் போ ஹான் – லீ ஜே ஹூயை தோற்கடித்தனர்.
இதன் மூலம் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி கூட்டணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்த கூட்டணி பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.