ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையுடன் இந்த வருடம் விளையாடவுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி.
ஐபிஎல் தொடரானது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நிறைவடைந்துள்ளது. இதில் தோனி சிஎஸ்கே அணியில் 14 வருடன் விளையாடியுள்ளார். அதேபோல் ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் 2 வருடன் விளையாடியுள்ளார்.
இவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 14 வருடத்தில் 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். புனே அணிக்காக விளையாடிய 2 வருடத்தில் 1 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார்.
இதன் மூலம் மொத்தமாக 11 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடி வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கவுள்ளார் தோனி.
இதில் முதல் 4 இடத்தில சிஎஸ்கே வீரர்களே உள்ளனர். இரண்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 8 இறுதிப் போட்டிகளில் ஆடி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அதன் பின் சிஎஸ்கே அணிக்காக ஏழு இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதே போல அம்பத்தி ராயுடுவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு முறையும், சிஎஸ்கே அணிக்காக நான்கு முறையும் பங்கேற்றுள்ளார்.
சுரேஷ் ரெய்னாவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று இருக்கிறார். முதல் நான்கு இடங்களை சிஎஸ்கே வீரர்கள் பிடித்த நிலையில், ஏழு ஐபிஎல் இறுதிப் போட்டிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
அவரும் சிஎஸ்கே அணிக்காக தனது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.
அதன் பின் அணி மாறிய அவர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தலா ஒரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்.