முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Proud of our DRDO scientists for Mission Divyastra, the first flight test of indigenously developed Agni-5 missile with Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology.
— Narendra Modi (@narendramodi) March 11, 2024
மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.