10 சர்வதேச விருதுகளை வென்ற 2 வயது சிறுவன் : யார் இந்த சிறுவன்?
Jul 27, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 சர்வதேச விருதுகளை வென்ற 2 வயது சிறுவன் : யார் இந்த சிறுவன்?

Web Desk by Web Desk
Mar 11, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

11.42 வினாடிகளில் உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயர்களை சட்டெனக் கூறி கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என 10 சாதனைகளை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சாய் சித்தார்த்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த மணிகண்டன், ராஜலட்சுமி என்ற தம்பதிக்கு 2 வயதுடைய சாய் சித்தார்த் என்ற மகன் உள்ளார்.

பிறந்த நாள் முதல் மிகவும் சுறு, சுறுப்பாக காணப்படும் சாய் சித்தார்த், இந்த வயதிலேயே 10 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.

இச்சிறுவன் தேசிய கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக தெரிவிக்கின்றார். இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார்.

இதை விட ஆசிரியர்த்துக்குரிய விஷயம் என்ன என்றால் 21.52 வினாடிகளில் 28 இந்திய மாநிலங்களையும், உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும் 11 வினாடிகளில் கண்டறிந்து, உலகின் ஏழு அதிசயங்களை 8.95 வினாடிகளில் கண்டறிந்து, 195 கொடிகளை மிகக் குறுகிய நொடிகளில் சொல்லி 10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். இது குறித்து பேசிய சாய் சித்தார் குடும்பத்தார், சிவில் சர்வீஸ் தேர்வு தயாராக பல்வேறு புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கின்றோம்.

உலகம், இந்திய வரைபடங்களை வீட்டில் வாங்கி வைத்திருந்து போது, அதனை பார்த்தார் குழந்தை சாய் சித்தார்த். இந்த நிலையில் ஒவ்வொரு கண்டங்கள் பெயர்கள் மற்றும் இந்திய வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் பெயர்களை அவனுக்கு சொல்லிக்கொடுத்தோம்.

இதை அவன் புரிந்து கொண்டான். 21.7 வினாடிகளில் இந்திய வரைபடத்தை வைத்து மாநிலங்களின் பெயரையும், அதனை தொடர்ந்து உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயரை 11.42 வினாடிகளில் கண்டறிந்து சாதனை படைத்தான்.

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. சாய் சித்தார்தின் திறமையை பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் அவருக்கு “ வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் “ என்ற பட்டத்தை அளித்து கெளரவ படுத்தியடுத்து .

லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், குழந்தையை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கி கெளரவ படுத்தியது. தேசிய கொடியை வைத்து ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளை அடையாளம் கண்டதற்காக ஆஸ்கார் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.

மழலை குழந்தை சாய் சித்தார்த்தின் இந்த சாதனைகள் நோபல் வேர்ல்ட் ரெகார்ட், இன்டர்ஷேனல் புக் ஆப் ரெக்கார்டு, வேர்ல்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டு உள்ளிட்ட புத்தகங்களிலும் இடம்பிடித்து உள்ளது.

வீட்டில் டி.வி.பயன்பாட்டை குறைத்துவிட்டோம். குழந்தைக்கு விளையாட, வீடியோ பார்க்க மொபைல் தருவதில்லை. அறிவுசார் விடயங்களை, செயல் முறை விளக்கங்களுக்கே முன்னுரிமை தருகின்றோம்.

நவீனமயான உலகில் குழந்தைகளிடம் மொபைல் ஃபோன் உள்ளிட்டவற்றை தரமால், அவர்களின் எதிர்காலம் நல்ல வகையில் அமைய, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் உரிய பழக்கங்களை கற்று தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Tags: 2-year-old boy wins 10 international awards : Who is this boy?
ShareTweetSendShare
Previous Post

முகமது ஷமி எப்போது களத்தில் இறங்குவார் ? – ஜெய் ஷா பதில் !

Next Post

பாகிஸ்தான் ‘முதல் பெண்மணி’ ஆனார் ஆசிஃபா பூட்டோ!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies