பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பொறுப்பேற்க வேண்டி பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது .
புதுக்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் , மாசிப்பெருந்திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது. இத் திருவிழாவில், திருச்சி மாநகர பாஜக சார்பில் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டி, 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தன்னலமில்லாத தனது சமூகப் பணிகளால் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான , எல்லோராலும் பாராட்டப் படும் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த், நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட, மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்திட , தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த அன்னதானப் பணியை இறைவன் திருவருளால் சிறப்புற நடத்தினார் .
இந்த விழாவில் புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
அன்னதானப் பணியை செய்த டாக்டர் ஆர். ஜி ஆனந்த் அவர்களையும் ,அவர்கள் குடும்பத்தினரையும் வாழ்த்தி, மீண்டும் மோடி பிரதமராக முத்துமாரியம்மனை வேண்டி வணங்கி சென்றனர் .