ஆந்திராவில் பாஜக, தெலுங்கு சேதம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி பேச்சுவார்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இது மாநிலத்தை மீட்டெடுக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.