ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஜேஇஇ முதன்மைத் தேர்வு மற்றும் பிரதானத் தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது.
இதில் முதன்மைத் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 55,608 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தமிழக மாணவர் ஆர்.முத்து (பி.ஆர்க்), ஆந்திராவைச் சேர்ந்த கோலாசானி சாகேத் பிரணவ் (பி.பிளானிங்) ஆகியோர் முழு மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் சாதனை படைத்தனர்.
அடுத்த கட்டமாக ஜேஇஇ தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.