கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! - இந்து முன்னணி இரங்கல்
Jul 26, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! – இந்து முன்னணி இரங்கல்

Web Desk by Web Desk
Mar 12, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மறைவிற்கு இந்து முன்னணி சாரபில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முக்தி அடைந்துள்ளார். ஆன்மீகத்திற்காகவும் இந்து சமுதாய ஒற்றுமைக்காகவும் அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர்.

தமிழகத்தில் நாத்திக சக்திகளால் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது, இந்து கடவுள்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களின் நாக்கை கூட அறுக்க
தயங்க தேவையில்லை என்று பொதுவெளியில் பகிரங்கமாக பேசியவர்.

ஆதீனங்கள் என்றாலே பூஜை புனஸ்காரங்களோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் இந்து தர்ம போராளியாக ஏற்றத்தாழ்வுகளை களைந்திடும் புரட்சியாளராக வாழ்ந்தவர் சிவலிங்கேஸ்வரர் ஸ்வாமிகள்.

2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் C.சசிகுமார் முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடனே இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு அன்று காலையிலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சசிகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரையில் வந்து அஞ்சலி செலுத்திய துறவி.

தமிழகத்தில் பல கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர். கோவையில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு விதமான சேவைப் பணிகளை செய்தவர்.

2019 -ஆம் ஆண்டு பொங்கலூர் பகுதியில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக 1008 கோமாதா பூஜை ஒரு லட்சம் குடும்பங்கள் பங்குபெற்ற சோடஷ மகாலட்சுமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சாமிகள் இந்து முன்னணி பேரியக்கத்திற்கு உறுதுணையாக நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். விடுதலைப் போராட்ட வீரர்களின் மீது தீரா பக்தி கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை எடுத்துக் கூறுவதில் பேரார்வம் உடையவர்.

புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளர். தேசியவாதி ஆன்மீகவாதி என்ற பல முகங்களைக் கொண்ட சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்துமுன்னணி ஆறுதல் கூறுகிறது. சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதங்களில் இளைப்பாற இந்துமுன்னணி வேண்டிக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Coimbatore Kamachipuri Atheenam is dead! - Hindu Front Condolences
ShareTweetSendShare
Previous Post

பாஜக மத்திய தேர்தல் குழு 2-வது கூட்டம் நிறைவு!

Next Post

பாஜகவில் இணைந்தது ஏன்? – சரத்குமார் விளக்கம்

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies