அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் முறைப்படி இன்று இணைந்தது. இந்த நிலையில், பாஜகவில் இணைந்ததற்கு என்ன காரணம் என்று, சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழகப் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
பின்னர் பேசிய சரத்குமார், நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் பாஜகவில் இணைந்துள்ளோம். இது தொடர்பாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருடனும் ஆலோசனை செய்த பிறகு ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது.
பிரதமர் மோடி காமராஜரைப் போல நல்ல ஆட்சி செய்து வருகிறார். இதனால், பிரதமர் மோடியை இந்திய திருநாடு மட்டுமல்லாமல், உலகமே அவரைப் பாராட்டுகிறது. நாங்கள் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக்குவோம் என்று சபதம் மேற்கொண்டார்.