சரத்குமார் போன்ற நல்லவர்கள் எல்லாம் தேசியத்துக்குத் தேவைப்படுகிறார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் முறைப்படி இன்று காலை இணைந்தது. இந்த நிலையில், பாஜகவில் இணைந்ததற்கு சரத்குமார் விளக்கம் கொடுத்தார்.
முன்னதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது, அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியைப் பாஜகவுடன் இணைத்தார். அப்போது பேசிய சரத்குமார், நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார்.
முன்னதாகப் பேசிய அண்ணாமலை, சரத்குமார் போன்ற நல்லவர்கள் எல்லாம் தேசியத்துக்குத் தேவைப்படுகிறார்கள். அவரைத் தமிழகம் போன்ற சிறிய வட்டத்துக்குள் அடைத்துவைக்க மனம் இல்லை. எனவே, இந்த இணைப்பு என்பது மகத்தானது. வரவேற்கதக்கது என்றார்.