பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை தேசத்திற்கு காட்டிய குஜராத் : பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை தேசத்திற்கு காட்டிய குஜராத் : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை குஜராத் காட்டியதாக பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி  ஆசிரமத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்தார்.  காந்தி ஆசிரம நினைவகத்தின் ரூ.1,200 கோடி மாஸ்டர் பிளானையும் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சந்ததியினர் மற்றும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருபவர்கள் சர்க்காவின் சக்தி மற்றும் புரட்சியை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெறுவார்கள். பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் விரக்தியில் இருந்த தேசத்தின் மீது காந்தியடிகள் நம்பிக்கையை  நிரப்பினார் என்று தெரிவித்தார். ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை குஜராத் காட்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான தெளிவான திசையை அவரின் தொலைநோக்கு காட்டுகிறது என்றும்,  கிராமப்புற ஏழைகளின் நலனுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும், மகாத்மா காந்தி வழங்கிய ஆத்ம நிர்பர்தா மற்றும் சுதேசியின் கொள்கைகளைப் பின்பற்றி ஆத்மநிர்பர் பாரத் பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இயற்கை விவசாயம் குறித்தும் பேசிய பிரதமர், குஜராத்தில் 9 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் 3 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவின் பயன்பாடு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் சமீபத்திய சாதனைகளையும் அவர் விவரித்தார்.

இன்று, இந்தியா வளர்ச்சி அடையும் உறுதியுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் போது, மகாத்மா காந்தியின் இந்த ஆலயம் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக உள்ளது. எனவே, சபர்மதி ஆசிரமம் மற்றும் கோச்ராப் ஆசிரமத்தின் வளர்ச்சி என்பது வரலாற்று இடங்களின் வளர்ச்சி மட்டுமல்ல. விக்சித் பாரதத்தின் உறுதி மற்றும் உத்வேகத்தின் மீது எங்களின் நம்பிக்கை என்றும் பிரதமர் கூறினார்.

காந்தியடிகளின் இலட்சியங்களும் அவருடன் தொடர்புடைய உத்வேகமான இடங்களும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமும் குறைந்தது 1000 குழந்தைகளை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்ற பள்ளி நிர்வாகங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Tags: Modigujaratsabarmathigandhiji
Share
Tweet
SendShare
Previous Post

இதற்குதான் சரத்குமார் தேவை! – அண்ணாமலை ஆவேசம்!

Next Post

நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies