ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 02:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 13 நாட்களாக ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். திடீரென ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைக்க என்ன காரணம்? யாருடைய ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பலமுறை ஈரானின் கடற்படை, இராணுவத் தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்தார்.

அமெரிக்காவுடனான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரான் அடுத்த சில நாட்களிலேயே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.

இனிப் பேசிப் பயனில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தவும் ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து 13-நாட்கள் இரவில் ஈரான் மீது குண்டுமழை பொழிந்த அமெரிக்கப் படைகள் மேலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

14வது இரவுக்கான தாக்குதல் திட்டத்தை முன்வைத்திருந்த பென்டகன் தயார் நிலையில் இருந்த போதும், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஈரான் மீதான தாக்குதல்களை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இரண்டு வாரங்களில் முதன்முறையாக, ஈரானின் தெற்குக் கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் உள்ள ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என்றும், வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறும் ராணுவத்துக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 24 மணிநேரத்துக்குள் ட்ரம்ப் தனது முடிவை மாற்றியதற்கு அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர்காரணம் என்று கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக கூறிய அட்மிரல் கூப்பர், தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அதிபரிடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஈரான் மீதான போரை மேலும் தீவிரப்படுத்தினால் அமெரிக்க மத்திய கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட ஏவுகணைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்றும், இது அமெரிக்க ராணுவத் தளங்களையும் நட்பு நாடுகளையும் குறிவைக்கும் ஈரானின் எதிர்த்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் போய் விடும் என்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெயின் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் ‘பேட்ரியாட்’ ரக ஏவுகணை எதிர்ப்பு யூனிட்களின் கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளது. கடந்த சில மாதங்களில் அமெரிக்கா 1,200-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பேட்ரியாட் ஏவுகணையின் மதிப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ள ஐநாசபையின் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது தொடர்பாக ஓமன் நாட்டுப் பிரதிநிதிகள் குழு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு ஏற்புடையதாக இருக்குமா ? என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் மீண்டும் போர் தீவிரமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran wariran warStrait of HormuzIran-US wariran war news
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Next Post

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies