குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
CAA யாருக்கும் எதிரானது கிடையாது. அது, மத்திய அரசின் முழு அதிகாரத்தில் இருக்கக் கூடிய சட்டம். CAAவை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் வரலாற்று புத்தகத்தை படிக்க வேண்டும் என சாடிய அண்ணாமலை, “மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்து என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல்வராக எதிர்க்க்கிறேன் என்றால் சரி. தமிழ்நாட்டுக்குள் விட மாட்டேன் என்று சொல்ல அவருக்கு அதிகாரம் கிடையாது” என்றார்.