ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!
Sep 27, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு திமுக மாஜி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் கடத்தி வந்தது.

இது தகவல் அறிந்த டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் வைத்து, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோ குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதி பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என என டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பினர். அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கு மூலையாகச் செயல்பட்டவர்கள் ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் எனச் சந்தேகப்படுகிறது டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார். இதனால், அவர்கள் இருவரையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோரும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: A new twist in Zafar Sadiq's case!
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் கிடையாது! – அண்ணாமலை பேச்சு

Next Post

இனி வீட்டில் இருந்தபடியே ராமர் கோவில் பூஜையை தரிசனம் செய்யலாம்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies