கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 26, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 11, 2026, 09:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தனியார் கல்லூரியில் சிசு கொலை, கரு கலைப்பு தடுப்பு தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றார். கரு கலைப்பை சட்டமாக்கியதால் ஒவ்வொரு ஆண்டும் 1.56 கோடி கருக்கலைப்பு நடைபெறும் எனக் கூறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? என வினவியுள்ளார்.

‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என்ற ஊர்வலத்தில் சபாநாயகர் பங்கேற்றது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு விடும் சவால் என கடுமையாக சாடியுள்ளார்.

மத அடையாளத்திற்காக பெண்கள் உரிமைகளோடு விளையாடும் சபாநாயகரின் பிற்போக்குத்தனமான போராட்டம் நவீன சமூகத்திற்கு அச்சுறுத்தல் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆனால், சபாநாயகர் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

நாட்டின் சட்டத்தை விட தனிப்பட்ட மத கோட்பாடுகளுக்கே சபாநாயகர் முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சபாநாயகரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: upreme Court's verdicttamilnadu bjp state presidentnainar nagendran press meetSpeaker J.C.T. Prabhakaranti-abortion rally
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

Next Post

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies