இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 25, 2026, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 25, 2026, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே வாஷிங்டனில் நடைபெறும் உயர்மட்ட சந்திப்பு, சர்வதேச புவிசார் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பால் இந்தியாவிற்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பல ஆண்டுகளாகவே இந்தியா, தேச நலனுக்கே முன்னுரிமை என்று எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் எல்லா கூட்டணியிலும் செயல்படும் தனது வெளியுறவுக் கொள்கையைச் சாமர்த்தியமாக நடைமுறைபடுத்தி வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளுடன் உறவுகளைப் பேணி வரும் நிலையிலும், சீனாவுடனும் நல்லுறவையும் போட்டியையும் சாமர்த்தியமாக மேம்படுத்தி வருகிறது. இந்தியாவின் இந்த வெளியுறவுக் கொள்கை உலகின் பெரும் வல்லரசுகளின் நடத்தையே மாற்றியுள்ளது.

இதன் விளைவாகவே அமெரிக்காவும், சீனாவும் தொழில்நுட்பத்தில் போட்டியிடவும், வர்த்தகம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், ஈரான் பற்றி விவாதிக்கவும், அதே நேரத்தில் இராணுவத் தடுப்பாற்றலைப் பேணவும் முயற்சி செய்து வருகின்றன.

ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்த புரிதலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வர்த்தகத்தை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருநாடுகளும் தீவிரமாக விவாதங்கள் நடத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகமே முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குச் சீன சந்தையைத் திறந்து விடுவதற்கான உறுதிமொழிகளை சீனாவிடம் அமெரிக்கா எதிர்பார்க்கிறது. சீனாவோ தனது ஏற்றுமதியாளர்களுக்கான சுங்க வரி விதிப்பில் கணிசமான தளர்வுகளை எதிர்பார்க்கிறது.

கடுமையான வர்த்தகப் போர் மற்றும் கூடுதல் வரி விதிப்புகளை ட்ரம்ப் குறைத்தால் அது சர்வதேச சந்தையை சீரமைக்கும் என்பதால் உலகளாவிய விநியோகச் சங்கிலி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகம் தடையின்றி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனது சொந்த முக்கிய கனிமத் திறன்களை வளர்த்து வரும் இந்தியா, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பன்முகப்படுத்தலின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. இதில் சீன கனிம வர்த்தகத்தில் அதிக நம்பகத்தன்மை ஏற்பட்டாலும் அமெரிக்கா மாற்று விநியோகஸ்தர்கள் மீதான தனது வர்த்தக உறவை உடனடியாக நிறுத்தாது என்றே கூறப்படுகிறது.

விரிவடைந்து வரும் அமெரிக்கத் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளாலும், சீனாவிற்கு வெளியே நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளாலும் இந்தியா பயனடைந்துள்ளது.

இந்நிலையில் AI செமிகண்டக்டர்கள் போன்ற தொழில்நுட்பத் துறையில் சீனாவைத் தனது முதன்மை தொழில்நுட்பப் போட்டியாளராகவே கருதும் அமெரிக்கா அத்துறைகளில் தனது பிடியை தளர்த்துமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டால் வேறு எங்கும் எளிதில் பெற முடியாத தொழில்நுட்ப மற்றும் தொழில்துறைத் திறன்கள்இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என்பதை இந்தியா மேம்படுத்த வேண்டியிருக்கும் என்று கூறப் படுகிறது.

ஈரானுடனான சீனாவின் நிதித் தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் நிலையில்
ஈரானில் சாபஹார் துறைமுகம் உள்ளிட்ட பல முதலீடுகளைச் செய்துள்ள இந்தியாவிற்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தைவான் விஷயத்தில் அடிப்படையில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள சீனா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே எந்தவொரு உடன்படிக்கைக்கும் தைவான் பிரச்சனையே ஒரு முக்கிய தடையாக உள்ளது.

2020க்குப் பிறகு சீனாவிற்கு மாற்றாக ஒரு முக்கிய உற்பத்தி மையமாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள இந்தியாவுக்கு, அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள் ஒரு தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கான வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம் என்றும், அதனால் இந்தியாவுக்குப் பெரும் இழப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்தபடி சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவை எட்டாத சூழலில் சீனாவைக் கையாள்வது கடினம் என்பதை உணர்ந்து அதிபர் ட்ரம்ப், இந்தியா அதிக மதிப்புமிக்கதாக மாறியுள்ளது என்று முடிவு செய்யலாம்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க-சீனப் போட்டியை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவராது என்பதால், இந்தியாவின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ட்ரம்ப்பும், ஷி ஜின்பிங்கும் ஒரு உடன்பாட்டிற்கு வருவார்களா என்பதல்ல கேள்வி.
இதையடுத்து அமெரிக்காவுக்கு இந்தியாவிடமிருந்து என்ன தேவைப்படும் என்பதே முக்கியமான கேள்வி.

எனவே, பொருளாதார ரீதியாக தனது உற்பத்தித் திறனையும், உள்நாட்டுச் சந்தையையும் சொந்த பலத்தில் மட்டுமே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதையே இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது

Tags: global economyinternational geopoliticsmilitary deterrence.washingtonChinese President Xi JinpingUS President Trump
Share
Tweet
SendShare
Previous Post

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Related News

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies