ஆசிய விளையாட்டு போட்டியின் கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானில் நடந்து வரும் இப்போட்டியில், 4.15 மீட்டர் உயரத்தை கோலுன்றி தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். கோலுன்றி உயரம் தாண்டுதலில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பரணிகா இளங்கோவன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கோலூன்றி தாண்டுதலில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதன் மூலம், நமது விளையாட்டு பயணத்தில் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்கியிருக்கிறார் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனை தொடரட்டும் எனவும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
















