காஷ்மீர் எப்போதும் பாகிஸ்தானின் உயிர்நாடியாகவே இருந்து வருகிறது என்றும், இனியும் அப்படித்தான் இருக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 81-வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஓராண்டுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டதாக கூறினார்.
ஐ.நா.சாசனத்தின் 51-வது பிரிவின் கீழ் தற்காப்புக்கான உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், ராணுவ தளபதி அசிம் முனீரின் தலைமையில் பாகிஸ்தான் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.
முழு அளவிலான போர் ஏற்படும் அபாயம் இருந்தபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார். மேலும், தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு நியாயமான மற்றும் நேர்மையான தீர்வு காணப்பட வேண்டும் என ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
















