மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக தரிசன டிக்கெட்டுகளை, பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்பது போல் தவெக அமைச்சர்கள் விற்றுள்ளதாக, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பணியாளர்களின் பணியை போற்றி பாத பூஜை செய்து வருகிறார் ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தூய்மை பணியாளர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் அவமதித்து அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களை நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைக்க வேண்டும் இல்லாவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
கும்பாபிஷேகம் முன்னிட்டு பாஸ் விற்பனை மற்றும் நன்கொடை வசூல் மூலம் மிகப்பெரிய முறைகட்டினை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளதாக சாடினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஜி பே போன் பே வங்கி கணக்குகள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.,தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் விஜயின் படம் ரிலீஸ் ஆவது போல் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து உள்ளனர் என்றும் அவ குறிப்பிட்டார்.
















