அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கி தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி, M.C.சம்பத், உடுமலை இராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று, S.வளர்மதி, வைகைச்செல்வன், K.V.ராமலிங்கம் ஆகியோரும் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
MSM. ஆனந்தன், M.ஆனந்தன், K.T. பச்சைமால், N.R. சிவபதி ஆகியோருக்கும் துணைபொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் எம்பியுமான சி.மகேந்திரனை, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமித்து விஜய் அறிவித்துள்ளார்.
















