எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எனக்கும் திமுக தான் எதிரி கட்சி என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி பரப்புரையில் பேசிய அவர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசிய திமுகவினர் உடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுக முயற்சித்தது என தெரிவித்தார்.
திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்லசாவு வராது என அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி கூறுகிறார் என்றும், தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவின் ஊழலை பற்றி பேசினால் தம் மீது அவதூறுகளை பரப்புகின்றனர் என்றும், “பெண்கள் பற்றி அவதூறாக பேசுவது ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாடிக்கையான ஒன்று என்றும் விஜய் குறிப்பிட்டார்.
















