அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி! : திட்டத்தை வழிநடத்திய ஷீனா ராணி - யார் இவர்?
Oct 26, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி! : திட்டத்தை வழிநடத்திய ஷீனா ராணி – யார் இவர்?

Web Desk by Web Desk
Mar 13, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) 10 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை தயாரித்துள்ளது.

இது ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் இந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ் மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (Multiple independently targetable re-entry vehicle) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் வளிமண்டலத்துக்குமேல் செலுத்தப்படும். பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும்.

இது 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது. இந்த சோதனையின் மூலம், எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். அந்த குழுவை வழிநடத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீனா ராணி ஆவார். அவர் டி.ஆர்.டி.ஓ.வின் ஏஸ் லேப் ஏ.எஸ்.எல்-ன் ( Ace Lab A.S.L ) இணை இயக்குநராகவும் உள்ளார்.

திருவனந்தபுரம் சி.இ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் என்ஜினீயரிங் படித்த இவர், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1998 ஆம் ஆண்டு பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைகளுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ-வில் புதிதாக சேர்ந்தார்.

அன்றிலிருந்து நாட்டின் அக்னி ஏவுகணை திட்டத்திற்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அக்னி-5 ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தேசத்தின் எல்லைகளை ஏவுகணைகள் பாதுகாப்பதால் அக்னி ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் ஏவுகணை ஏவுதலுக்கு தயாரானபோது எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது போல் இருந்தது.

ஆனால் பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது மற்றும் எனது சகோதரியின் வாழ்வில் என் அம்மா தான் உண்மையான தூண்” என்று கூறினார்.

திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். அவரது கணவரும் டி.ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்தவர். ஷீனா ராணி கடந்த 2016-ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Agni-5 missile test success! : Sheena Rani who led the project - who is she?
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் கபூர் பாஜகவில் இணைந்தார்!

Next Post

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி!

Related News

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies