டெல்லி மெட்ரோ நான்காம் கட்டத்திற்கு ரூ. 8,399 கோடி செலவில் இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், டெல்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி-லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான இரண்டு மெட்ரோ வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ 4-ம் கட்டத்தின் இந்திரபிரஸ்தத்திற்கு, மொத்த திட்ட மதிப்பீடாக ரூ.8,399 கோடி, 8.4 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி பிளாக் வரை, இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான இரண்டாவது கார்டியர் சுமார் 12.4 கிலோமீட்டர் நீளம் இருக்கும். இது மார்ச் 2029க்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.