ஜப்பான் நாட்டின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் ராக்கெட் விண்ணில் ஏவிய சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது.
ஜப்பான் நாட்டின் ஸ்டாட் அப் நிறுவனமான ஸ்பைஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்து இதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.
பின்னர் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
Ouch the first Kairos rocket in Japan just, exploded after about 5 seconds. 😬
The launch site at first glance seems ok… I think. pic.twitter.com/mddZrPgJ1e— Marcus House (@MarcusHouse) March 13, 2024
அரசின் சிறிய அளவிலான சோதனை செயற்கைக்கோளை சுமந்தபடி சீறிப்பாய்ந்த ராக்கெட், ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
18 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து ஸ்பிரிங்லர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனால் எரிந்துகொண்டிந்த பாகங்கள் சுற்றியுள்ள மலை சரிவுகளில் விழுந்தன. ராக்கெட் வெடித்து சிதறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பான் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த தோல்வியானது வருவாய் ஈட்டக்கூடிய வகையில் செயற்கைக்கோள் ஏவும் ஜப்பானின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.