இரயில் தண்டவாளத்தில் கால்நடைகள் இறப்பு சம்பவங்களை தடுக்க உலோக தடுப்பு வேலி அமைப்பது வருவதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே, மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உலோக வேலி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளரிடம் பேசிய அவர்,
“மும்பை முதல் அகமதாபாத் வரையில் மிகவும் இரயில் தண்டவாளத்தில் புதுமையான வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலியை அமைத்த பின், கால்நடைகள் இரயில் தண்டவாளத்தில் செல்ல முடியாது. இந்த வேலி முழுமை பெற்ற பின் கால்நடைகள் உயிரிழப்பு பூஜ்ஜியமாக இருக்கும்.
இந்த கண்டுபிடிப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலி காரணமாக மும்பையிலிருந்து அகமதாபாத் இடையே ஓடும் இரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் கொண்டு செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.