தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார்.
நாடு முழுவதும் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எல்.முருகன், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகவேண்டும் என்றும், அதற்கு தாங்கள் பாடுபடுவோம் என்றும் டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.