பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என கடந்த வாரம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசிய நிலையில் டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில், திமுக ஊழல் கட்சி, அது தமிழகத்தில் இருந்து திமுக விரைவில் காணாமல் போகும் என பேசியிருந்தார்.
நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்” என கடந்த வராத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
அமைச்சர் அன்பரசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல் துறையினர் 5 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.