இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை பங்குபெற்றது.
இந்திய வீரர்கள் இந்தோனேசியா வீரர்களான முகமது அஹ்சன் – ஹெண்ட்ரா செட்டியவான் இணையுடன் விளையாடினர்.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி 21 புள்ளிகளை பெற்று 21-18 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் – ஹெண்ட்ரா செட்டியவான் இணையை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் 21 புள்ளிகளை பெற்று 21-14 என்ற கணக்கில் இந்தோனிசிய இணையை வீழ்த்தியது.
இந்த மூலம் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் இந்திய வீரரான லக்ஷயா சென் பங்குபெற்றார். இவர் டென்மார்க் வீரரான ஜோஹன்னசென் உடன் விளையாடினார்.
இந்த போட்டியில் இந்திய வீரரான லக்ஷயா சென் 21-14, 21-14 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஜோஹன்னசென்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.