ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி இன்று பதவியேற்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சுதா மூர்த்திக்கு ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண் மூர்த்தி, ராஜ்யசபா தலைவர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரபல கல்வியாளர், எழுத்தாளரை சுதா மூர்த்தியை ராஜ்யசபாவுக்கு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.