இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே, கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு அறிமுகமான திரிமானேவை இலங்கை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இதுவரை இவர் 44 டெஸ்ட், 127 ஒருநாள் போட்டி, மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடிய திரிமானே இலங்கை அணிக்காக மூன்று டி20 உலக கோப்பைகளில் விளையாடிவுள்ளார்.
அதில் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது திரிமானே அணியில் இருந்தார். அது மட்டுமல்லாமல் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் திரிமானே விளையாடியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் லஹிரோ திரிமானே, இலங்கை அணியை ஐந்து ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் திரிமானே, இலங்கையில் உள்ள அருணாநாதபுரம் என்ற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்று இருக்கிறார்.
அப்போது எதிரே வந்த லாரி ஒன்று நேரடியாக திரிமானேவை காரில் மோதி இருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த திரிமானே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
திரிமானே தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவரைக் காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
இலங்கை அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடிய திரிமானே கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த ஜூலையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.
திரிமானே உடல்நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வீரர் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.