கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள குணா குகை எனப்படும் டெவில்ஸ் கிட்சேன் குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள படம் கேரளாவில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார். சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் 101 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.