தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமாரின் 63-வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.
விடுதலை படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ பட நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படிஇ இப்படத்தின் பெயர் ‘குட் பேட் அகிலி’ ( Good bad ugly ) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு வெளியான வில்லன் படத்திற்கு பிறகு அஜித் குமாரின் படத்தின் தலைப்பு தற்போது தான் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் பான் இந்தியா படமென்பதால் இப்படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2025 பொங்கலுக்கு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.