குஜராத் சர்வதேச நிதித்தொழில்நுட்ப நகரத்தில் தரமான நிதித் தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இன்று 23 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
குஜராத் சர்வதேச நிதித்தொழில்நுட்ப நகர திட்டத்தில் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலாளர் ஜூஹி முகர்ஜி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியப் பொறுப்பு அதிகாரி ராஜேஷ் வாசுதேவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
குஜராத் சர்வதேச நிதித்தொழில்நுட்ப நகரம் என்பது இந்தியாவின் நிதிச் சேவைகள் மற்றும் நிதித்தொழில்நுட்பச் சூழலை வளர்ப்பதற்கான மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் முன்முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.