போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,
முதலமைச்சர் சரிந்திர புத்தகத்தை சரியாக படிக்க வேண்டும். முதலமைச்சர் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு போட்டு உள்ளார். போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும். என் மீது வன்மத்தை தீர்த்து கொள்வது பதில் அல்ல. மக்கள் பதில் கேட்டால் சொல்லாமல் இருப்பதால் மக்களுக்கு முதலமைச்சர் மீது சந்தேகம் அதிகமாகிறது.
சென்னையில் உள்ள குடோனில் நடத்திய சோதனைக்ளில் லேப்பாக இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து கொண்டு இருக்கிறது.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை என்பது போல் என் மீது வழக்கு தொடர்ந்து, நான் தப்பு எதுவும் செய்ய வில்லை என்று சொல்வது போல் உள்ளார்.