கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 373-ல் எதேகௌடனஹள்ளி முதல் அர்ஜுனஹள்ளி வரை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ.576.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
📢 Karnataka 🛣
➡ In Karnataka, an allocation of ₹576.22 Crores has been sanctioned for the 4-laning of the Yedegowdanahalli to Arjunahalli segment of NH-373 in Hassan district, spanning 22.3 kilometers.
➡ This corridor serves as a vital link to renowned tourist…
— Nitin Gadkari (मोदी का परिवार) (@nitin_gadkari) March 14, 2024
கர்நாடகாவின், ஹசன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 373 -ல் எதேகவுடனஹள்ளி முதல் அர்ஜுனஹள்ளி வரையிலான 22.3 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு ரூ.576.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்மகளூரு, பேலூர், ஹலேபீடு மற்றும் ஷ்ரவணபெலகொலா போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு முக்கிய இணைப்பாக இந்த வழித்தடம் செயல்படுகிறது என்று கட்கரி கூறியுள்ளார்.
திட்டத்தின் அமலாக்கம் மேம்பட்ட இணைப்பை உறுதியளிக்கிறது, சுற்றுலாவை ஊக்குவிக்கவும் பிராந்தியத்திற்குள் பொருளாதார முயற்சிகளுக்கு ஊக்கமாகவும் உள்ளது.