தமிழக மக்கள் அனைவரும், NaMo-Tamil கணக்கைப் பின்தொடர்ந்து, நமது பாரதப் பிரதமர் மோடியின் உரையை, தமிழில், அவரது குரலிலேயே கேட்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் மேடைப் பேச்சுக்கள் மற்றும் உரைகள் அனைத்தும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அவரது குரலிலேயே தமிழில் @NaMoInTamil என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தமிழக மக்கள் அனைவரும், இந்தக் கணக்கைப் பின்தொடர்ந்து, நமது… pic.twitter.com/3JFbize0I8
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 15, 2024
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சுக்கள் மற்றும் உரைகள் அனைத்தும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அவரது குரலிலேயே தமிழில் NaMo- தமிழ் என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தமிழக மக்கள் அனைவரும், இந்தக் கணக்கைப் பின்தொடர்ந்து, நமது பாரதப் பிரதமர் மோடியின் உரையை, தமிழில், அவரது குரலிலேயே கேட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்துக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செய்துவரும் நலத்திட்டங்கள் குறித்து, NaMo தமிழ்
கணக்கில் கேட்டு மகிழலாம். திமுக உள்ளிட்ட கட்சிகள், இத்தனை ஆண்டுகளாக நமது பிரதமர் மோடி உரையைத் திரித்தும், பொய் கூறியும் தமிழக மக்களை ஏமாற்றி வந்தது, இனி பொதுமக்கள் மத்தியில் எடுபடாது எனத் தெரிவித்துள்ளார்.