டி20 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட மற்ற சில போட்டிகளுக்கான கூடுதல் டிக்கெட்கள் விற்பனை வரும் செவ்வாய் கிழமை, மார்ச் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்குபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜுன் 29ம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள மற்ற நான்கு அணிகளும் ஒருமுறை விளையாடும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
Additional tickets for this year's #T20WorldCup in the West Indies and USA will be available for purchase from Tuesday 19 March 👀
More 👇https://t.co/KdQaKAajkf pic.twitter.com/YHNjqGs3xu
— ICC (@ICC) March 15, 2024
அதில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று குழுவில் உள்ள ஏதேனும் மூன்று அணிகளுடன் விளையாடும். அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன் முடிவில் ஜுன் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
இதற்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி ஏற்கனவே தொடங்கியது. இந்நிலையில் கூடுதல் டிக்கெட்களை வழங்க ஐசிசி முன்வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வரை 37 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரையிறுதி போட்டி உட்பட மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19 ஆம் தேதி ( செவ்வாய் கிழமை ) விற்பனைக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதற்கான டிக்கெட்களை tickets.t20worldcup.com இந்த இணையவழி மூலம் ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.