பத்திரனா வரிசையில் மற்றொரு குட்டி மலிங்காவை கண்டறிந்த சிஎஸ்கே : யார் இவர்?
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்திரனா வரிசையில் மற்றொரு குட்டி மலிங்காவை கண்டறிந்த சிஎஸ்கே : யார் இவர்?

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் காயத்தால் முழுமையாக விளையாடாத தீபக் சஹருக்கு பதிலாக இலங்கையின் இளம் வீரர் மதிஷா பதிரனா வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பில் இலங்கை ஜாம்பவான் முன்னாள் வீரர் லசித் மலிங்கா போல சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர்.

அதனால் மும்பைக்கு மலிங்காவை போல சென்னைக்கு பதிரனா கிடைத்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் எனும் 17 வயது கொண்ட அந்த வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார்.

குறிப்பாக செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி அளவிலான தொடரில் அதிரடியான வேகத்தில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி அசத்திய அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

அதனால் ஐபிஎல் 2024 தொடரில் நெட் பவுலராக செயல்படுவதற்கு அவரை அழைத்து வந்துள்ளதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் அவரை நெட் பவுலராக அழைத்து வந்தோம். இது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தேர்வாகும். அதில் எம்எஸ் தோனி ஈடுபடவில்லை. ஸ்லிங்கி ஆக்சனை கொண்டுள்ள மதுலன் எங்களுக்கு பயிற்சியில் உதவியாக இருப்பார் என்று நாங்கள் கருதினோம்.

பொதுவாக நாங்கள் வித்தியாசமான வேரியசன்களை கொண்டுள்ள பவுலர்களை பயிற்சியில் பயன்படுத்துவோம். அவர் அது போன்றவர்” என்று கூறினார்.

முன்னதாக பதிரானாவும் இதே போல முதலில் நெட் பவுலராக செயல்பட்டு பின்னர் சென்னை அணியில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

Tags: iplcskt20ipl 2024CSK finds another little Malinga in Pathirana line: Who is this?
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் பூடான் பிரதமர் சந்திப்பு!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies