உலகப்புகழ் பெற்றது மதுரை சித்திரை திருவிழா. இந்த விழா வரும் ஏப்ரல் மாதம் 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மீனாட்சி அம்மனுக்கு ஏப்ரல் 19 -ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. 20 -ம் திக் விஜயமும், ஏப்ரல் 21 -ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 22 -ம் தேதி சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23 -ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்வார்.
கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து தினமும் சுவாமி ஊர்வலம் மதுரை வீதிகளில் நடைபெறும். திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை மனம் உருக தரிசனம் செய்வார்.