ஐபிஎல் தொடரின் அறிமுக விழாவில் பங்கேற்க 10 அணிகளின் கேப்டன்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
அதேபோல் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவையும் சென்னையில் நடத்த உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால் ஐபிஎல் தொடரின் அறிமுக விழாவில் பங்கேற்க 10 அணிகளின் கேப்டன்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடரை போல் பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க ஐபிஎல் நிர்வாக குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி செய்ய உள்ள நட்சத்திரங்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.
கடந்த முறை பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்று குஜராத் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து சென்றார். அதேபோல் இம்முறை சேப்பாக்கம் என்பதால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான டைகர் ஷெராஃப் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பாலிவுட்டின் பிரபல நடிகைகள் சார்பாக நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.