1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி, இந்தியாவில் போலியோ நோயிலிருந்து குழந்தைகளை காப்பதற்காக, முதல் முதலாக சொட்டு மருந்து செலுத்தப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் மார்ச் 16 ஆம் தேதி, தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது எவ்வளவு முக்கியம், அதன் நன்மைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பெரியவர்களிடமும் சுகாதாரப் பாதுகாப்புக்காக தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அவசியம். பெரியவர்களுக்கு பொதுவான காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க சந்தையில் பல வகையான தடுப்பூசிகள் உள்ளன.
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சராசரியாக பத்து இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுவருகிறது.
உலக சுகாதார நிறுவனம் 2014 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.