அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப் பங்குபெற்றார். அவருடன் கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரி போட்டியிட்டார்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி 6 புள்ளிகளை பெற்று 6-4 என்ற கணக்கில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப்வை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் 7 புள்ளிகளை பெற்று 7-6 என்ற செட் கணக்கில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தினார். பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்று நடைபெற்றது.
அதில் கோகோ காப் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மரியா சக்காரி 6 புள்ளிகளை பெற்று 6-2 என்ற கணக்கில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப்வை 2-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.