டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அவருக்கு இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியது.
ஆனால், இந்த சம்மன்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துவிட்டார். இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அமலாக்க இயக்குனரக சம்மன் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 -வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21 -ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.