திருச்சி பாராளுமன்றம், அந்தநல்லூர் பனையபுரத்தில் நெல் கொள்முதல் செய்யும் வணிகர்களை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு செய்த சாதனைகள், குறிப்பாக விவசாய துறையில் நடந்த புரட்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வருங்கால திட்டங்களுக்கான ஆலோசனைகளும் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில், அந்தநல்லூர் தெற்கு மண்டல் தலைவர் அழகர்சாமி, மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினரும், சக்தி கேந்திர பொறுப்பாளருமான கற்கண்டு, கிளை தலைவர் புண்ணியமூர்த்தி, கிளை செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.