பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது ? டெல்லி கேபிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன.
2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியானது இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த நான்கு போட்டியிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவில் நடைபெறும் பிரீமியர் லீக் வரலாற்று ஆண்கள் போட்டி மற்றும் பெண்கள் போட்டி என இரண்டிலும் இதுவரை டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை.
ஆகையால் இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது வரலாற்று வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.