35 கடற்கொள்ளையர்கள் கைது : இந்திய கடற்படை அதிரடி!
Jul 31, 2025, 03:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

35 கடற்கொள்ளையர்கள் கைது : இந்திய கடற்படை அதிரடி!

Web Desk by Web Desk
Mar 17, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, மால்டா நாட்டின் சரக்குக் கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக களத்தில், இறங்கி மீட்டுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் வணிக கப்பல்களை கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், கப்பலில் உள்ளவர்களை காயப்படுத்துவதோடு, கப்பலில் இருக்கும் பொருட்களையும் கொள்ளையடித்து செல்கின்றன. கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கப்பலை தங்களுடைய கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி இந்திய கடற்கரையிலிருந்து, 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் சென்று கொண்டிருப்பதை இந்திய கடற்படை கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து, கப்பலை மீட்க இந்திய கடற்படை அதிரடியாக களத்தில் இறங்கியது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் நடவடிக்கையில், கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17  விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

பின்னர், சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, திடீரென இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கப்பல் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழியின்றி கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையிடம் சரணடைந்தனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. தொடர்ந்து, கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர், கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். கப்பல் ஊழியர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர்.  இவர்கள் 100 நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். தற்போது மால்டா நாட்டின் சரக்கு கப்பல் இந்திய கடற்படை வசம் உள்ளது.

#IndianNavy thwarts designs of Somali pirates to hijack ships plying through the region by intercepting ex-MV Ruen.

The ex-MV Ruen, which had been hijacked by Somali pirates on #14Dec 23, was reported to have sailed out as a pirate ship towards conducting acts of #piracy on high… pic.twitter.com/gOtQJvNpZb

— SpokespersonNavy (@indiannavy) March 16, 2024

Tags: indiannavyINSKolkata35 Pirates to surrenderINSSubhadraMV Ruen
ShareTweetSendShare
Previous Post

பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்த அண்ணாமலை!

Next Post

பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்! – அண்ணாமலை

Related News

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies