இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் பங்குபெற்றார்.
அவருடன் அமெரிக்கா வீரரான டாமி பால் விளையாடினார். இருவருக்கும் இடையேயான இந்தப் போட்டியின் முதல் சுற்றில் அமெரிக்கா வீரர் டாமி பால் 6 புள்ளிகளை பெற்று 6-1 என்ற கணக்கில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ்வை தோற்கடித்தார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் 7 புள்ளிகளை பெற்று 7-6 என்ற கணக்கில் அமெரிக்கா வீரர் டாமி பால்லை வீழ்த்தினார்.
இரு வீரர்களும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்று ஆட்டம் ட்ராவில் இருந்தது. இதனால் இறுதி சுற்றை கைப்பற்றும் வீரரே இறுதிப்போட்டிக்கு முன்னேறுவர்.
இந்நிலையில் இறுதிச்சுற்றில் அமெரிக்கா வீரர் டாமி பால்லை, ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் 6-2 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் 2-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த இறுதிப்போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இதில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ், ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸை எதிர்கொள்ள உள்ளார்.