நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை, தடுக்க முயன்றபோது, 16 இராணுவ வீரர்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகிறது. மோதலில், ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அதை தடுக்க வரும் அதிகாரிகளும் கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு தலைமையக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துகுர் குசாவ் கூறியதாவது, “கடந்த வியாழன் அன்று போமாடி கவுன்சில் பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலை தடுத்து, அமைதி காக்க அனுப்பப்பட்ட இராணுவ வீரர்கள், சில சமூக இளைஞர்களால் சூழப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ஒரு கட்டளை அதிகாரி, இரண்டு மேஜர்கள், ஒரு கேப்டன் உட்ப 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.