தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று
மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், வெளி மாவட்டங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள், காணொலி வாயிலாகக் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் பணிகள், தேர்தல் பாதுகாப்பு, பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவது, பறக்கும் படை கண்காணிப்பு, வாகன சோதனை , அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினர் பணிகள் குறித்துக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வாரியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.