தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இவர், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் அவர் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதனால், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பெரும்பாலான மீடியாக்களில் இந்த செய்தி தலைப்பு செய்தியாக உலா வருகிறது.